search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடுகள் பலி"

    சூளகிரி அருகே ஆட்டுப் பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆடுகளை சிறுத்தைப் புலி கடித்து குதறியதில் 10 ஆடுகள் இறந்தன. மேலும் 5 ஆடுகள் உயிருக்கு போராடிய நிலையில் உள்ளன.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம்  சூளகிரி பகுதி சென்னபள்ளி ஊராட்சியை சேர்ந்தது பலவனதிம்மன பள்ளி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஆடு மேய்க்கும் தொழிலாளி போடியப்பா (வயது 70). இவர் பலரது ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துசெல்லும் தொழில் செய்து வந்தார். இதில் செம்மரி ஆடுகள், வெள்ளாடுகள் என சுமார் 15 ஆடுகளை வளர்த்து வந்தார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை அவரது கிராமத்திற்கு அருகில் உள்ள மேலுமலையில் இருந்து வந்த சிறுத்தைப் புலி இவரது ஆட்டுப் பட்டியில் புகுந்தது. இதில் 15 ஆடுகளை ஆவேசமாக கடித்து குதறியது. இதில் 10 ஆடுகள் இறந்தன. மேலும் 5 ஆடுகள் உயிருக்கு போராடிய நிலையில் உள்ளது. 

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனப்பாதுகாவலர் மகேந்திரன் மர்ம விலங்குகள் நடமாடிய பகுதியில் கால் தடங்களை சேகரிக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆடுகளை கடித்து குதறியது சிறுத்தைப் புலியாக இல்லாமல் வெறிநாய்களாக இருக்கலாம் என தெரிவித்தார்.

    மேலும், கால்நடை மருத்துவர் ஆடுகள் எப்படி இறந்தது என்பது குறித்து பரிசோதனை மேற்கொண்டு வருகின்றார். சோதனை முழுவதுமாக முடிவடைந்த பிறகுதான் ஆடுகள் இறந்ததன் முழுவிவரம் தெரியவரும்.
    ஆம்பூர் அருகே மர்ம நோயால் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் இறந்தன. கால்நடைத்துறையினர் மற்றும் பொது சுகாதாரத் துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே கிராமப் பகுதிகளில் வெள்ளாடுகள் இறந்த சம்பவத்தை தொடர்ந்து கால்நடை மற்றும் சுகாதாரத் துறையினர் அப்பகுதிகளில் முகாமிட்டு ஆய்வு செய்தனர்.

    ஆம்பூர் அருகே மிட்டாளம், பைரப்பள்ளி, பந்தேரப்பள்ளி, வன்னிய நாதபுரம், ரகுநாதபுரம், மேக்கனாம்பல்லி, ராள்ளக்கொத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிப்பவர்கள் வெள்ளாடுகளை வளர்த்து வருகின்றனர்.

    அதோடு மட்டுமல்லாமல் தமிழக அரசு இலவசமாக வழங்கிய வெள்ளாடுகளையும் வளர்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மர்ம நோயால் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் இறந்தன.

    இந்நிலையில் மிட்டாளம், பைரப்பள்ளி பகுதிகளுக்கு கால்நடைத்துறையினர் மற்றும் பொது சுகாதாரத் துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். கால்நடைத்துறை நோய்கள் புலனாய்வு இணை இயக்குனர் டாக்டர் ஸ்ரீஹரி தலைமையில் கால்நடை டாக்டர்கள் ரமேஷ்குமார், பிரவீன்குமார் உள்ளிட்ட குழுவினரும், பொது சுகாதாரத்துறை வட்டார மருத்துவ அலுவலர் குமார் தலைமையில் மாவட்ட பூச்சியியல் நிபுணர் காமராஜ், வட்டார சுகாதார அலுவலர் ரஷீத், சுகாதார ஆய்வாளர் பிரேம் உள்ளிட்ட குழுவினரும் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதுகுறித்து கால்நடை துறையின் நோய்கள் புலனாய்வு பிரிவு இணை இயக்குனர் ஸ்ரீஹரி கூறியதாவது:-

    வழக்கத்தை காட்டிலும் அதிக பனிப்பொழிவே வெள்ளாடுகள் இறப்புக்கு காரணம். திறந்த வெளியில் உள்ள பட்டிகளில் வெள்ளாடுகளை அடைக்கக்கூடாது. கூரை மேய்ந்த கொட்டகைகளில் மட்டுமே ஆடுகளை அடைத்து பாதுகாக்க வேண்டும்.

    ஆடுகளுக்கு நோய் தாக்குதல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். நோய் தாக்கி வெள்ளாடுகள் இறந்தால் அவற்றை குழி தோண்டி புதைக்க வேண்டும். உணவுக்காக சம்மந்தப்பட்ட வெள்ளாட்டின் இறைச்சியை பயன்படுத்தக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும், நோய் தாக்குதலுக்கு ஆளான வெள்ளாட்டு கொட்டகைகளை பார்வையிட்டனர். வெள்ளாடுகளின் சளி, சாணம் போன்றவற்றை பரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.

    மதுரை அருகே இன்று அதிகாலை வாகனம் மோதியதில் 40 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. மேலும் வாலிபர் படுகாயம் அடைந்தார்.
    அவனியாபுரம்:

    மதுரை மாவட்டம் ஊமச்சிக்குளம் மாரணி பகுதியைச் சேர்ந்தவர் கூத்தபெருமாள் (வயது 40). இவர் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார்.

    இன்று அதிகாலை அவனியாபுரம் அருகே உள்ள வலையங்குளத்தில் ஆட்டுக்கிடை அமைப்பதற்காக தனது ஆடுகளை ஓட்டிச்சென்றார். பெருங்குடி ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராத விதமாக ஆடுகளின் மீது மோதியது.

    இதில் 40 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தன. இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும்.

    மேலும் மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற கூத்த பெருமாள் மீதும் அந்த வாகனம் மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த அவனியாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.
    பர்கூர் அருகே மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் செத்தன. சிறுத்தைப்புலி நடமாட்டம் அந்த பகுதியில் உள்ளதா? என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பர்கூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் முச்சானிமேடு அருகில் உள்ள நல்லப்ப நாயக்கன் கொட்டாய் கிராமத்தில் வசிப்பவர் சென்னையன் (வயது 67). இவர் தனது வீட்டின் அருகில் பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் ஆடுகளை மேய்த்து விட்டு பட்டியில் அடைத்திருந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை சென்று பார்த்த போது பட்டியில் இருந்த தடுப்பு வேலிகள் உடைக்கப்பட்டு 3 ஆடுகள் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. மேலும் ஒரு ஆட்டை காணவில்லை. இறந்த ஆட்டின் வயிறு, நெஞ்சுப்பகுதி ஆகியவற்றில் மர்ம விலங்குகள் கடித்து கொன்றிருப்பது தெரிய வந்தது.

    இதே போல் சென்ற மாதம் வளையல்காரன்கொட்டாயில் நவநீதா என்பவரின் 4 ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்து கொன்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மர்ம விலங்கின் கால்தடங்களை வைத்து இவை சிறுத்தைப்புலியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து வனத்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    அந்த சிறுத்தைப்புலியை வனத்துறையினர் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தொடர்ந்து ஆடுகளை மர்மவிலங்கு கடித்து கொன்று வருவதால் அந்த பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 
    புதுக்கோட்டை அருகே நேற்று இரவு மர்ம கும்பல் ஆடுகளை திருடி தலைகளை துண்டாக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வேம்பன்பட்டியை சேர்ந்தவர் இளங்கோ , விவசாயி. இவர் 15 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்றிரவு அவர் வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் ஆடுகளை அடைத்து வைத்திருந்தார்.

    இந்தநிலையில் இன்று காலை பார்த்த போது ஆடுகளை காணவில்லை. இதையடுத்து இளங்கோ தேடி சென்ற போது, அப்பகுதியில் உள்ள ஒரு இடத்தில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. மேலும்2 ஆடுகள் தலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தன. இது குறித்து இளங்கோ, கந்தர்வக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    நேற்றிரவு இளங்கோ வீட்டிற்கு வந்த மர்மநபர்கள், ஆடுகளை திருடி , மறைவான பகுதிக்கு சென்றதும் ஆடுகளை வெட்டிக்கொன்று  கறிகளை எடுத்து செல்ல திட்டமிட்டிருக்கலாம். பொதுமக்கள் நடமாடுவதை அறிந்து அதனை கைவிட்டு விட்டு சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அல்லது ஏதாவது பிரச்சினை காரணமாக இளங்கோவின் எதிராளிகள் இந்த செயலில்  ஈடுபட்டனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே வீட்டின் முன்பு கட்டப்பட்டு இருந்த ஆடுகள் மர்ம விலங்கு தாக்கி பலியான சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி கர்நாடக மாநிலத்தையொட்டி உள்ளது. வனப்பகுதியான தாளவாடி அருகே உள்ளது சூசைபுரம்.

    இந்த ஊரை சேர்ந்தவர் மாதேவன். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி மங்கிலி. இவரது வீடும் தோட்டமும் அடுத்தடுத்து உள்ளது.

    மங்கிலி தனது வீட்டில் 4 மாடுகள், 5 ஆடுகள் வளர்த்து வருகிறார். இவற்றை வீட்டின் முன் கட்டி விட்டு படுத்து தூங்குவார். அதே போல் நேற்று இரவும் வழக்கம் போல் வீட்டின் முன் ஆடு- மாடுகளை கட்டி விட்டு மங்கிலி வீட்டில் தூங்கினார்.

    இன்று காலை எழுந்து பார்த்த மங்கிலிக்கு கடும் அதிர்ச்சி அளித்தது. வீட்டின் முன் கட்டப்பட்டிருந்த 3 ஆடுகள் மர்ம விலங்கால் கடித்து குதறப்பட்டு இறந்து கிடந்தது.

    இதில் ஒரு ஆட்டின் முக்கால் வாசி உடலை மர்ம விலங்கு தின்று விட்டது. மற்ற 2 ஆடுகளின் குரல் வளையை மர்ம விலங்கு கடித்து கொன்று இருப்பது தெரிய வந்தது.

    அடுகளை கடித்து கொன்ற மர்ம விலங்கு எந்த விலங்காக இருக்கும் என தெரியவில்லை.

    ஊருக்குள்ளே ஆடுகளை கடித்து கொன்ற மர்ம விலங்கால் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொது மக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர்.

    சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் சென்று விசாரித்து வருகிறார்கள்.
    ×